மனநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மக்கள் ஆதரவு திரட்டும் புது இயக்கம்

சென்னை 


ஒருவகை மனநலக் கோளாறு அல்லது அதுபோன்ற பிற நோய் மிகவும் அதிகமாக உள்ள நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருக்கிறது. ஊரக-நகர்புற வேறுபாடுகள் எதுவுமின்றி ஒருவகை கடுமையான மனநல கோளாறால் 6.5 சதவீத இந்தியர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அறிக்கை கூறுகிறது.


மனநலக் கோளாறு பற்றிய விழிப்புணர்வு குறைவாக இருப்பது, அது பற்றி சமூகத்தில் கறை படிந்திருப்பது மற்றும் சமுதாயத்தில் ஆதரவு இல்லாதது இந்தியாவில் கவலைக்குரிய சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. மனநல கோளாறல் பாதிக்கப்பட்டவர்கள் மீது அனுதாபம் இருந்தபோதிலும், அதன் மீதுள்ள கறை மக்களிடையே பரவியிருப்பது வறுத்தத்திற்குரியது.


இந்தப் பிரச்சனை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் மற்றும் இதனால் பெருமளவில் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு ஆதரவு திரட்டுவதற்காகவும், ஹெல்த்கேர் துறையில் ஒரு தொலைநோக்குடையவரும் மற்றும் வான்டேஜ் என்டர்பிரைஸ் நிறுவனருமான அமான் இக்பால் அவர்கள் “IAmHere4You” என்ற இயக்கத்தை அறிவித்துள்ளார். மனநல பாதிப்பு நோய் உள்ளவர்கள் மீது மற்றவர்களிடையே படிந்திருக்கும் களங்கத்தை நீக்குவது, இந்த களங்கத்தை நீக்க படைவீரர்கள் போல வரும் நபர்களின் ஆக்கபூர்வமான வாய்மொழி மூலம் பரப்புவது மற்றும் இறுதியாக மனநலம் பற்றியும் மற்றும் ஆக்கபூர்வமான முறையில் அதை கருத்தில் கொண்டு ஒரு வெளிப்படையான பேச்சுவார்த்தைக்கு சமுதாயத்தில் இடத்தை உருவாக்குவது இந்த இயக்கத்தின் நோக்கமாகும்.