“காவலர் நீத்தார் நினைவு நாள்” அக்டோபர்-21ம் தேதி நாடு முழுவதும் அனுசரிப்பு

மதுரை, 


 



“காவலர் நீத்தார் நினைவு நாள்” ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர்-21ம் தேதி நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினத்தன்று மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவுப்படி மதுரை மாநகர காவல் துறையினரால் 5 கிலோமீட்டர் ஓட்டம், வரும் அக்டோபர்-20-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை காலை 0600 மணிக்கு நடத்தப்பட உள்ளது. 
இந்த ஓட்டம், தமுக்கம் மைதானத்திலிருந்து தொடங்கி கோரிப்பாளையம், பனகல் சாலை, ஆவின் சந்திப்பு, கே.கே நகர் பிரதான சாலை, அண்ணாநகர் காவல் நிலையம் வழியாக, கே.கே நகர் வளைவு, மாவட்ட நீதிமன்றம் வழியாக, ரேஸ் கோர்ஸ் சாலை, அழகர் கோயில் சாலை, தல்லாகுளம் பெருமாள் கோயில் வழியாக தமுக்கம் மைதானத்தில் முடிவடைகிறது.
 முதலில் பதிவு செய்யும் 1500 நபர்களுக்கு இலவசமாக டி சர்ட் வழங்கப்படுகிறது. மேலும், இதில் வெற்றி பெற்று முதல் 3 இடங்களை பிடிக்கும் நபர்களுக்கு ரொக்கப்பரிசும், சான்றிதழ்களும், பதக்கமும் மதுரை மாநகர காவல்துறை ஆணையர் அவர்கள் வழங்குவார். மேலும், பங்கு பெறும் அனைவருக்கும், சான்றிதழ்கள் வழங்கப்படும்.
இதன் தொடர்ச்சியாக, மறுநாள், அக்டோபர்-21ம் தேதி அன்று 10-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு “காவல் துறை” சார்ந்த தலைப்பின் கீழ் கட்டுரைப் போட்டியானது (தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழிகளில்) 21.10.2019 அன்று காலை 10.00 மணி முதல் 12.00 வரை தமிழ்நாடு ஆண்கள் பாலிடெக்னிக் கல்லூரி, திருப்பரன்குன்றம் சாலையில் நடத்தப்படவுள்ளது. மேலும், இதில் வெற்றி பெறும் முதல் 3 நபர்களுக்கு ரொக்கப்பரிசும், சான்றிதழ்களும் மற்றும் பதக்கமும் மதுரை மாநகர காவல்துறை    ஆணையரால் வழங்கப்படும்.
அனைத்து பொது மக்களும் தவறாமல் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பரிசுகளை பெற்றுச்செல்லுமாறு மதுரை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும் விபரங்களுக்கு  94421 77991/75300 50009 என்ற எண்ணில் தொடர் கொள்ளலாம்.