தமிழகத்தில் இனி எப்போது தேர்தல் வந்தாலும் இனிமேல் அதிமுக ஆட்சி தான் தென்காசி எம்எல்ஏ ஆரூடப்பேச்சு

" alt="" aria-hidden="true" />


தமிழகத்தில் இனி எப்போது தேர்தல் வந்தாலும் இனிமேல் அதிமுக ஆட்சி தான்  தென்காசி எம்எல்ஏ ஆரூடப்பேச்சு


தமிழகத்தில் எப்போது தேர்தல் வந்தாலும் அதிமுக தான்  ஆட்சியைப் பிடிக்கும் என்று தென்காசி ஒன்றியம்ஆயிரப்பேரியில்  நடைபெற்ற தமிழக பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டத்தில்  எம்எல்ஏ  செல்வ மோகன்தாஸ் பாண்டியன் பேசினார்.


தென்காசி ஒன்றியம் ஆயிரப்பேரியில்  முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72 ஆவது பிறந்தநாள் விழா மற்றும் தமிழக பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.  கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா தலைமை தாங்கினார் முன்னாள் ஒன்றிய செயலாளர் திருப்பால் பாண்டியன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர்  தங்கபாண்டியன்,   பழனி பாண்டியன்,  .பரமசிவன்,  சுப்பையா செட்டியார்,.முருகன் (எ) சீனிவாசப் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் 


தென்காசி ஒன்றிய  செயலாளர் சங்கரபாண்டியன் அனைவரையும்வரவேற்று பேசினார். ஆயிரப்பேரி அதிமுக கிளைச் செயலாளர் சுடலையாண்டி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.  கூட்டத்தில் ஆயிரப்பேரி,  பாட்டப்பத்து,   பகுதியில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை தென்காசி எம்எல்ஏ.   செல்வ மோகன்தாஸ் பாண்டியன்  வழங்கி  சிறப்புரை ஆற்றினார்.  அப்போது அவர் பேசியதாவது:-


தமிழகத்தில் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் வழியில் எடப்பாடி பழனிச்சாமி, ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் சிறப்பான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சி அடையும் வகையில் நல்லாட்சி  நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதிமுக  ஆட்சியில்  அனைத்து தரப்பு மக்களும் பயன் அடைந்து வருகிறார்கள். குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு  பிறக்கும் நாள் முதல் ஆரோக்கியத்துடன் வளரவும்,  சிறப்பான கல்வி கற்கவும், அதன்பின் நல்ல முறையில் திருமணம் நடைபெறவும்,  பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.


மேலும் ஆயிரப்பேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் ஆயிரப்பேரி பகுதியில் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் கட்ட அரசு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. அந்த பணிகள் துவங்க உள்ள நிலையில் திமுகவினர்கள் அதனை கெடுக்கும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறார்கள்.


எனவே இந்த பகுதியில் உள்ள பொது மக்கள் திமுகவிற்கு சரியான பாடம் புகட்ட வேண்டும். தமிழகத்தில் தேர்தல் எப்போது வந்தாலும் அதிமுக தான் அமோக வெற்றி பெறும்.  தமிழகத்தில் அடுத்தும் அதிமுக ஆட்சி தான் . எனவே இந்த பகுதி மக்கள் அதிமுகவிற்கு ஆதரவளித்து அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.