கம்பம்.
மாநில அளவிலான கராத்தே போட்டி கம்பத்தில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இந்த விழாவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன், மற்றும் துரை நெப்போலியன் வழக்கறிஞர், அவர்கள் முன்னிலையிலும் மற்றும் உத்தமபாளையம் காவல் துணை கண்காணிப்பாளர் சின்ன கண்ணு குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார் இந்த போட்டியில் எடை வயது வாரியாக கொடுக்கப்பட்டன மேலும் கட்டா கும்ட்டே என்று இரு பிரிவுகளாக போட்டி நடத்தப்பட்டது இதில் சாம்பியன் பரிசை பிலாலியா அரபிக் கல்லூரி மற்றும் ஆர்ட்ஸ் கலைக்கல்லூரி ஆலன் திலக் சிடோ ரியோ கராத்தை பள்ளி, இந்நிகழ்ச்சியில் தேனி மாவட்ட கராத்தே அசோசியன் செயலாளர் கராத்தே ராமகிருஷ்ணன், போட்டிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார் மேலும் இந்த போட்டியில் மதுரை, தேனி ,திண்டுக்கல் சிவகங்கை ராமநாதபுரம், காரைக்கால், ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏராளமான பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் போட்டியில் கலந்துகொண்டனர் மேலும் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கி ஊக்குவிக்கும் சான்றிதழ் வழங்கினார்.